ஜெஃப்ரி
ஜெஃப்ரிபடம் | எக்ஸ்

பிக் பாஸ் வெற்றியாளர் பெண்தான்; முத்துக்குமரன் அல்ல: ஜெஃப்ரி

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வெற்றிபெற உள்ள நபர் பெண் போட்டியாளர்தான் என பாடகர் ஜெஃப்ரி தெரிவித்துள்ளார்.
Published on

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வெற்றிபெற உள்ள நபர் பெண் போட்டியாளர்தான் என பாடகர் ஜெஃப்ரி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வெற்றியாளராக பலரும் முத்துக்குமரனைக் கூறிவரும் நிலையில், ஜெஃப்ரியின் கருத்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரத்தில் ராணவ், மஞ்சரி ஆகியோர் குறைந்த வாக்குகளைப் பெற்றதாக வெளியேற்றப்பட்டனர்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் 8 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இதனால், போட்டியை மேலும் சுவாரசியமாக்கும் வகையில் பழைய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையவுள்ளனர்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜெஃப்ரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது பிக் பாஸ் வெற்றியாளர் யார் என்பது குறித்து பதில் அளித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பலரும் முத்துக்குமரன் வெற்றிபெறுவார் எனக் கூறிவரும் நிலையில், பிக் பாஸ் வெற்றியாளர் ஒரு பெண் தான் என ஜெஃப்ரி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் செளந்தர்யாவுடன் ஜெஃப்ரி நெருக்கமாக இருந்ததால், செளந்தர்யாவைக் குறிப்பிட்டு பேசுவதாக நினைத்தனர். ஆனால், சற்று எதிர்பாராத வகையில் பவித்ரா ஜனனியின் பெயரைக் குறிப்பிட்டார்.

பிக் பாஸ் வீட்டில் பல போட்டிகளில் பவித்ரா முழு ஈடுபாட்டுடன் பங்கேற்றார். ஆனால், செளந்தர்யா மெத்தனமாகவே பங்கேற்றார். அதோடு மட்டுமின்றி அவருடைய வெற்றிக்கு சமூகவலைதளங்களில் பலர் செயல்பட்டு வருகின்றனர்.

செளந்தர்யா வெற்றி பெற்றால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும். போட்டியில் முழுத்திறமையை வெளிப்படுத்தியவர் வெற்றி பெறுவதே பிக் பாஸ் மீது நம்பிக்கையை அளிக்கும் என ரசிகர்கள் பலர் கருதுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com