ஹிந்தி பிக் பாஸ்: ஸ்ருதிகா வெற்றிக்காக களமிறங்கிய நண்பர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை ஸ்ருதிகாவுக்கு ஆதரவாக நடிகர் புகழ் விடியோ வெளியிட்டுள்ளார்.
ரோஷினி ஹரிபிரியன் / ஸ்ருதிகா / புகழ்
ரோஷினி ஹரிபிரியன் / ஸ்ருதிகா / புகழ்
Published on
Updated on
2 min read

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை ஸ்ருதிகாவுக்கு ஆதரவாக நடிகர் புகழ் விடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிகா வெற்றி பெற தமிழக ரசிகர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேபோன்று நடிகை ரோஷினி ஹரிபிரியன், தர்ஷன் உள்ளிட்ட பலரும் ஸ்ருதிகா வெற்றி பெற ரசிகர்களிடம் வாக்கு சேகரித்து விடியோ வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஹிந்தி மொழியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதி வாரம் வரை சென்றுள்ளதால், அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என புகழ் உள்ளிட்ட பலர் விடியோவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஸ்ருதிகாவுக்கு வரவேற்பு

ஹிந்தி மொழியில் பிக் பாஸ் சீசன் 18 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் 18 நிகழ்ச்சி, 95 நாள்கள் கடந்த நிலையில், இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு வாரமே அவகாசம் உள்ளது. இந்த வாரத்தில் நடிகை ஸ்ருதிகா நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

ராஜத் தலால், சாசத் பாண்டே ஆகியோருடன் ஸ்ருதிகாவும் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளார்.

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருதிகா
ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருதிகாபடம் | எக்ஸ்

இதனால், ரசிகர்கள் பலர் ஸ்ருதிகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என நடிகர் புகழ் விடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகர் புகழ் விடியோவில் தெரிவித்துள்ளதாவது, ''ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிகா வெற்றிகரமாக பயணித்து வருகிறார். தமிழக மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற ஸ்ருதிகா, ஹிந்தி மக்களிடமும் பிரபலமடைந்துள்ளார். அங்கும் அவர் விரும்பப்படும் நபராக இருப்பதால் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் 95 நாள்கள் கடந்துள்ளார். ஸ்ருதிகா வெற்றி பெற அனைவரும் வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், ஹிந்தியில் வெற்றி பெறுவது மிகப்பெரிய விஷயம். பலரும் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்'' என விடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று நடிகை ரோஷினி ஹரிபிரியன், தர்ஷன், குரேஷி உள்ளிட்டோரும் ஸ்ருதிகா வெற்றி பெற ரசிகர்களிடம் வாக்கு சேகரித்து விடியோ வெளியிட்டுள்ளனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஸ்ருதிகா, தற்போது ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். தன்னுடைய வெள்ளந்தியான குணத்தால், அங்கும் ஏராளமான ரசிகர்களை ஸ்ருதிகா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | பிக் பாஸ் பணப்பெட்டியை எடுக்கப்போவது யார்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.