
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, டியர் காம்ரெட் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்தனர்.
இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து, அல்லு அர்ஜூன், கார்த்தி, விஜய், ரன்பீர் கப்பூர் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பான் இந்தியா படங்களில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: எனக்கு ஒன்றும் இல்லை... நன்றாக இருக்கிறேன்: விஷால்
இவர் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் ரூ. 1850 கோடி வரை வசூலித்து மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது.
இந்த நிலையில், உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது ராஷ்மிகாவுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவிட்டவர், “நல்லது. இது மகிழ்ச்சியான புத்தாண்டு என நினைக்கிறேன். உடற்பயிற்சிக் கூடத்தில் என்னாலேயே எனக்குக் காயம் ஏற்பட்டுவிட்டது.
இன்னும் சில வாரங்களோ அல்லது மாதமோ ஓய்வில் இருப்பேன். தமா, சிக்கந்தர், குபேரா படப்பிடிப்புகளில் விரைவில் இணைவேன் என நம்புகிறேன். இந்தத் தாமதத்திற்காக என் இயக்குநர்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். கொஞ்சம் சரியானதும் வந்துவிடுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் திரைப்படத்தை இந்தாண்டு ஏப்ரல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். அதேபோல், குபேரா படமும் நீண்ட நாள்கள் படப்பிடிப்பில் இருக்கிறது.
இந்த இரு படங்களும் விரைவில் முடிய வேண்டுமென்றால் ராஷ்மிகா படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும். இந்த சூழலில், காயம் ஏற்பட்டதால் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.