காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிக்பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவரா? வெளியான தகவல்!

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

News image

பிக்பாஸ் சீசன் 8.(கோப்புப்படம்)

Updated On :18 ஜனவரி 2025, 2:40 pm

DIN

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி எப்போதும்போல மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கியது. ஆனால் இந்த சீசனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டடிருந்தது.

இதுநாள் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வந்த கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. அவருக்கு பதில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

24 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் தற்போது 5 போட்டியாளர்கள் உள்ளனர். விஷால், ரயான், முத்துக்குமரன், பவித்ரா, சௌந்தர்யா ஆகிய 5 பேர்தான் அந்த போட்டியாளர்கள்.

பிக்பாஸ் சீசன் 8 இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால் இவர்களில் யார் அந்த டைட்டில் வின்னர் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான கிராண்ட் பினாலே நாளை(ஞாயிறு) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. அவருக்கு கோப்பையுடன் ரூ.40 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.