ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கிங்ஸ்டன் படப்பிடிப்பு நிறைவு!

கிங்ஸ்டன் படப்பிடிப்பு நிறைவடைந்தது...

News image
Updated On :19 ஜனவரி 2025, 1:02 pm

DIN

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள கிங்ஸ்டன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஜிவி - 25 படத்தை கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார். இப்படத்துக்கு கிங்ஸ்டன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பேச்சிலர் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்த திவ்யபாரதியே, கிங்ஸ்டன் படத்திலும் நாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமாரே இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

கடலில் உள்ள மர்மத்தைக் கண்டறியும் மீனவரின் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மீனவராக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்.

கிங்ஸ்டன் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்ததுடன் இப்படம் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததா ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.