மத கஜ ராஜா திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு உருவாகி வெளியீட்டிற்குத் தயாரானது.
ஆனால், அப்படத்தைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் தங்களின் பழைய கடனை அடைப்பதற்காக அப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்தனர். தற்போது, இப்படம் பொங்கல் வெளியீடாக 12 ஆண்டுகள் கழித்து ஜன.12-ல் வெளியானது.
இதையும் படிக்க: சேகர் கமூலாவை வியப்பில் ஆழ்த்திய தனுஷ்!
நடிகர்கள் விஷால், சந்தானம், மனோபாலா ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாகக் கவனம் பெற்றதால் படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. மேலும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், மத கஜ ராஜா திரைப்படம் வெளியான 9 நாள்களில் உலகளவில் ரூ. 44 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்த வார இறுதிக்குள் இப்படம் ரூ. 50 கோடியை வசூலித்துவிடும் என்றே தெரிகிறது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விக்ரமின் துருவ நட்சத்திரம், சந்தானத்தின் சர்வர் சுந்தரம் உள்ளிட்ட நீண்ட நாள்கள் திரைக்கு வராமலிருக்கும் படங்களையும் விரைவில் திரைக்குக் கொண்டு வர விநியோகிஸ்தர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?

சுமுகமாக முடிந்த அரசன் பேச்சுவார்த்தை?

கர டிரைலர் எப்போது?
சூர்யாவுக்காக பாடிய சிலம்பரசன்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

