திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

சூர்யாவுக்காக பாடிய சிலம்பரசன்!

கருப்பு படத்தில் பாடிய சிலம்பரசன்...

News image

சாய் அபயங்கர் - சிலம்பரசன், சூர்யா

Updated On :23 மார்ச் 2026, 6:19 pm IST

நடிகர் சிலம்பரசன் கருப்பு திரைப்படத்தின் அறிமுக பாடலைப் பாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படத்தை இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ளார். கடந்தாண்டே வெளியாக வேண்டிய திரைப்படம் ஓடிடி விற்பனை தேக்கத்தால் முறையான வெளியீட்டுத் தேதியைச் சந்திக்காமல் தள்ளிச்சென்றபடியே இருந்தது.

இதனால், சூர்யா ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்தைக் கடுமையாக விமர்சித்ததுடன் விரைவில் வெளியிடக்கோரி பேசி வந்தனர்.

பல காத்திருப்புக்குப் பின் அண்மையில், இப்படம் வருகிற மே 15 ஆம் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

இந்த நிலையில், சாய் அபயங்கர் இசையில் நடிகர் சிலம்பரசன் கருப்பு திரைப்படத்தின் அறிமுக பாடலைப் பாடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இப்பாடலுக்காக சிலம்பரசன் சம்பளம் வாங்க மறுத்துவிட்டார் என்றும் சூர்யா கொடுத்த பரிசை மட்டும் ஏற்றுக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.