நடிகர் சூர்யா நாயகனாக நடிக்கும் “கருப்பு” திரைப்படத்தின் வெளியீடு குறித்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் பிரபல நடிகர் சூர்யாவின் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “கருப்பு”. புதுமையான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார்.
இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்ப்பைப் பெற்ற நிலையில், கருப்பு படத்தின் வெளியீட்டிற்காக நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் நீண்டகாலமாகக் காத்திருகின்றனர்.
இதையடுத்து, இப்படத்தின் வெளியீடு குறித்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்டுள்ள விடியோவில் பேசியதாவது:
“நீண்டகாலமாக “கருப்பு” திரைப்படத்தின் வெளியீட்டிற்காக நீங்கள் காத்திருப்பது எனக்குத் தெரியும். அதிலும், நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் சிறிது ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பதும் எனக்குத் தெரியும். சுமார் 2 ஆண்டுகளாக நானும்தான் காத்திருக்கிறேன்.
விரைவில், 10 நாள்களுக்குள் இப்படத்தின் வெளியீடு உள்ளிட்ட அப்டேட்களை நாங்கள் பகிரவுள்ளோம். ஆனால், படத்தின் வெளியீடு நிச்சயம் ஏப்ரல் 10 அன்று இல்லை” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, கருப்பு திரைப்படம் வரும் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக, சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.
Summary
Director RJ Balaji about the release of the film “Karuppu”, starring actor Suriya.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா

கருப்பு பக்கா கமர்சியல் திரைப்படம்: ஆர். ஜே. பாலாஜி

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!

கருப்பன் வரான்... வெளியான அப்டேட்! என்னவாக இருக்கும்?
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

