இயக்குநர் சுசீந்திரனின் ’2கே லவ் ஸ்டோரி’... நாளை டிரைலர் வெளியீடு!

சுசீந்திரன் இயக்கியுள்ள ’2கே லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு குறித்து...
2கே லவ் ஸ்டோரி
2கே லவ் ஸ்டோரி
Updated on
1 min read

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘2கே லவ் ஸ்டோரி திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நவீன இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’2கே லவ் ஸ்டோரி'.

புதுமுக நாயகனாக ஜெகவீர் நடித்துள்ள இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜான் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, சிங்கமுத்து, ஜிபி முத்து மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை திட்டமிடப்பட்ட காலகட்டத்திற்கு முன்பே 38 நாட்களில் சுசீந்திரன் முடித்தார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார். படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. நடிகர்கள் விஷ்ணு விஷால், சூரி ஆகியோர் டிரைலரை வெளியிடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com