முதல் 5 இடங்களைப் பிடித்துள்ள தொடர்கள்...
முதல் 5 இடங்களைப் பிடித்துள்ள தொடர்கள்...இன்ஸ்டாகிராம்

தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்கள்!

முதல் 5 இடங்களில் உள்ள தொடர்களில் 4 தொடர்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன.
Published on

சின்ன திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல் 5 இடங்களில் உள்ள தொடர்களில் 4 தொடர்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன.

சின்ன திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ஏராளமான ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். ஒவ்வொரு வாரமும் எந்தெந்தத் தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை டிஆர்பி புள்ளிப் பட்டியல் மூலம் அறியலாம்.

சின்ன திரை தொடர்களுக்கான இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், இந்த வாரம் ரசிகர்களை அதிகம் கவர்ந்து முதல் 5 இடங்களில் உள்ள தொடர்கள் குறித்து காணலாம்.

இதில், 5வது இடத்தில் மருமகள் தொடர் உள்ளது. இத்தொடரில் கேப்ரியல்லா - ராகுல் ரவி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் டிஆர்பி பட்டியலில் 8.75 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

4வது இடத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர் உள்ளது. இத்தொடரில் கோமதி பிரியா - வெற்றி வசந்த் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் டிஆர்பி பட்டியலில் 8.96 புள்ளிகளுடன் உள்ளது.

3வது இடத்தில் சன் தொலைக்காட்சியின் கயல் தொடர் உள்ளது. இத்தொடரில் சைத்ரா ரெட்டி - சஞ்சீவ் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். டிஆர்பி பட்டியலில் 9.91 புள்ளிகளை இத்தொடர் பெற்றுள்ளது.

2வது இடத்தில் மூன்று முடிச்சு தொடர் உள்ளது. இத்தொடரில் ஸ்வேதா கொண்டே - நியாஸ் கான் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் 10.25 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

முதலிடத்தில் சிங்கப் பெண்ணே தொடர் உள்ளது. இத்தொடரும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இத்தொடரில் மணீஷா மகேஷ் - அமல்ஜித் - தர்ஷக் கெளடா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் டிஆர்பி பட்டியலில் 10.60 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

முதல் 5 இடங்களைப் பெற்றுள்ள தொடர்களின் பட்டியலில், சன் தொலைக்காட்சியின் 4 தொடர்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | அடுத்த பிறவியில் செளந்தர்யாவாகப் பிறக்க ஆசைப்படும் பவித்ரா ஜனனி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com