
குடும்பஸ்தன், பாட்டல் ராதா வசூல் நிலவரம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் மற்றும் குரு சோமசுந்தரம் நடித்த பாட்டல் ராதா திரைப்படங்கள் ஜன. 24 ஆம் தேதி திரைக்கு வந்தன.
இதில், குடும்பஸ்தனாக ஒரு மனிதன் எவ்வளவு சிக்கல்களையும் பிரச்னைகளையும் எதிர்கொள்கிறான் என்பதை நகைச்சுவை பாணியில் பேசிய குடும்பஸ்தன் படமும் மதுப்பழக்கத்தால் சீரழியும் நாயகனின் கதையாக பாட்டல் ராதாவும் உருவாகியிருந்தன.
இதையும் படிக்க: ‘நான் ஆணையிட்டால்’ எம்ஜிஆர் - விஜய்! சில சுவாரஸ்யங்கள்!
இரண்டு படங்களும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று கூடுதல் திரைகளில் திரையிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இப்படங்களின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குடும்பஸ்தன் திரைப்படம் இதுவரை ரூ. 8 கோடிக்கு அதிகமாகவும் பாட்டல் ராதா ரூ. 1 கோடிக்கும் குறைவாக வசூலித்திருக்கிறதாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.