ஜன நாயகன் திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என அறிவித்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது.
ஜன நாயகன் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில் நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: ‘நான் ஆணையிட்டால்’ எம்ஜிஆர் - விஜய்! சில சுவாரஸ்யங்கள்!
இதுவரை, இரண்டு போஸ்டர்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இரண்டும் ரசிகர்களைப் பெரிதாகக் கவரவில்லை என்றாலும் இப்படம் அரசியலை மையமாக வைத்து உருவாகிறது என்கிற ஊகத்தை அளித்துள்ளது.
முக்கியமாக, விஜய் சாட்டையை சுழற்றும் இரண்டாவது போஸ்டரின் வண்ணம், ‘நான் ஆணைவிட்டால்’ வாசகம் குறிப்பிட்ட அரசியல் கட்சியைத் தாக்குவதுபோன்றே இருக்கிறது.
இந்த நிலையில், ஜன நாயகன் படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமத்தை பிரபல நிறுவனம் ரூ. 75 கோடிக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது, உண்மையென்றால் நடிகர் விஜய் நடித்த படங்களிலேயே இதுவே ஓவர்சீஸ் உரிமத்திற்கு அதிக தொகைக்கு விற்கப்பட்ட படமாகும்.