

நடிகர் மோகன்லாலை இயக்குவது எளிமையான வேலை என இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் உடன் லைகா புரடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
எல் 2இ: எம்புரான் என்ற படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. படத்தின் முதல் பாகத்தைப்போல் இரண்டாம் பாகத்திற்கும் கதை, திரைக்கதை, வசனத்தை முரளி கோபி எழுதியுள்ளார்.
மார்ச் 27ஆம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. இதில் டோவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமார், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், ஃபாசில், சச்சின் கேதகர் நடித்துள்ளார்கள். பிருத்விராஜும் இதில் ஒரு காதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐஏஎன்எஸ்-க்கு அளித்த பேட்டியில் பிருத்விராஜ் கூறியதாவது:
மோகன்லாலை இயக்குவது எளிமையான வேலை. அவர் மிகவும் கொடுத்து வைத்தவர். ஒரு இயக்குநருக்கு அவருடைய தொழில் எளிமையை தருகிறது.
இயக்குநராக எனக்கு இது மூன்றாவது படம். மூன்றிலுமே மோகன்லால் இருந்துள்ளார். நான் ஒரு நடிகர் என்பதால் அவரை இயக்குவது எனக்கு கூடுதல் சலுகை போன்றது.
ஒரு நடிகராக நான் என்னை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டுமென்பதை தொடர்ச்சியாக அவரைப் பார்த்து கற்றுக்கொள்கிறேன். இயக்குநரின் நோக்கத்துக்கே தன்னை ஒப்புக்கொடுப்பதுதான் அவரது பாணி. மிகவும் திறமை வாய்ந்த நடிகர் ஒருவர் இயக்குநரிடம் ‘நான் என்ன செய்ய வேண்டும்?’ எனக் கேட்பது மிகப்பெரிய மகிழ்ச்சி அல்லவா.
அவரை இயக்கும்போது நான் மிகவும் பொறுமையாகவும் எதற்கும் கவலைப்படாமல் இருந்தேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.