
இயக்குநர் ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தில் நடிகை பிரியங்கா மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்றதாகக் கூறப்படுகிறது.
ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து படம் இயக்கவுள்ளார்.
இப்படத்திற்காக, மகேஷ் பாபு தலைமுடியை நீளமாக வளர்த்து வருகிறார். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பாக ஒரு பாடலைக் காட்சிப்படுத்த தென்னாப்பிரிக்காவில் 15 நாள்கள் படப்பிடிப்பு நடத்த ராஜமௌலி முடிவு செய்துள்ளராம்.
மிக பிரம்மாண்டமாக பழங்குடியினர் ஆடும் பாடலாக இது உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் நாயகியாக நடிகை பிரியங்கா சோப்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இப்படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா ரூ. 30 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் உண்மையென்றால், இந்தியாவில் அதிக சம்பளம் பெற்ற முதல் நடிகை பிரியங்கா சோப்ராவாகே இருப்பார்.
சிட்டாடல், பே வாட்ச், லவ் அகைன் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்ததால் பிரியங்கா தன் சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார்.