தம்பி அறிமுகமாகும் படத்தில் நடித்த விஷ்ணு விஷால்!

தம்பி அறிமுகமாகும் படத்தில் நடித்த விஷ்ணு விஷால்!

ஓஹோ எந்தன் பேபி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால்....
Published on

நடிகர் விஷ்ணு விஷால் தன் தம்பி நாயகனாகும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய தம்பி ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார். ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு ‘ஓஹோ எந்தன் பேபி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்க, ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது. இதில், சில காட்சிகளில் விஷ்ணு விஷால் இடம்பெற்றிருந்தார். அதனால், இப்படத்தில் அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், படத்தின் புரமோஷனில் பேசிய விஷ்ணு விஷால், “ஓஹோ எந்தன் பேபி திரைப்படத்தில் நானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கான காட்சியில் இடம்பெற்றிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

vishnu vishal acted in oho enthan baby movie with his brother

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com