சுகப்பிரசவம் குறித்து சின்ன திரை நடிகை நெகிழ்ச்சி!

சின்ன திரை நடிகை சமீரா ஷெரீஃப் தனது சுகப்பிரசவம் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
சமீரா ஷெரீஃப்
சமீரா ஷெரீஃப்இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
2 min read

சின்ன திரை நடிகை சமீரா ஷெரீஃப் தனக்கு சுகப்பிரசவம் நடந்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இரண்டாவது முறையாக தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், கருவுற்ற காலத்தில் கடந்து வந்த கடினமான சூழல்களுக்கு பலன் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2016-ல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சமீரா ஷெரீஃப். இதில் சமீராவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்ட நிலையில், இந்தத் தொடர் முடிவதற்குள் மலர் என்ற புதிய தொடரில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.

இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், இதன் தயாரிப்பாளராகவும் களமிறங்கினார். தெலுங்கு மொழியில் 10க்கும் அதிகமான தொடர்களில் சமீரா நடித்துள்ள நிலையில், சினிமா நடிகைக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.

சமீரா
சமீரா இன்ஸ்டாகிராம்

இவர் கடந்த 2019 நவம்பரில் சையத் அன்வர் என்பவரை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஏற்கெனவே ஆண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவது முறையாக சமீனா கருவுற்றிருந்தார். தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை மற்றும் குடும்பத்துடன் சமீரா
குழந்தை மற்றும் குடும்பத்துடன் சமீராஇன்ஸ்டாகிராம்

இது குறித்து நெகிழ்ச்சியுடன் சமீரா பதிவிட்டுள்ளதாவது,

எங்கள் மகிழ்ச்சியின் பூங்கொத்தை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துகிறோம் - சையத் அமீர். இது மென்மையான பயணமாக இல்லை. மாறாக பல்வேறு ஏற்ற இறக்கங்களை நாங்கள் சந்தித்தோம். நான் பலமிழந்தபோதெல்லாம் எனக்கு நம்பிக்கை அமீர் எனக்கு அளித்தான். எனக்கு ஊக்கமளித்தான். இப்போது இந்த உலகிற்கு அவன் அறிமுகமாகியுள்ளான். இது நான் அவனை கவனித்துக்கொள்ள வேண்டிய நேரம். அல்லாவின் கருணையால் நீண்ட பிரசவ வலிக்குப் பிறகு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தேன். இந்தக் கதை பலரிடம் சொல்வதற்கு தகுதி பெற்ற ஓர் கதையாகியுள்ளது. மனதில் என்றுமே நிலைத்து நிற்கக்கூடிய பயணம் இது. அமீர், எங்கள் ஒவ்வுமொத்த குடும்பத்துக்கும் கிடைத்த பரிசு நீ. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு நாங்கள் உன்னை நேசிக்கிறோம். உனது தகப்பனார், உன் விரல்களைப் பிடித்து விளையாடும் நாள்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | கேதார்நாத் பயண அனுபவத்தைப் பகிர்ந்த பவித்ரா ஜனனி!

Summary

serial actress Sameera Sharif has posted about her healthy Normal delivery with excitement.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com