சின்ன திரை நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான பவித்ரா ஜனனி கேதார்நாத்திற்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டார். அதன் பயண அனுபவங்களை விடியோவாக ரசிகர்களுடன் அவர் பகிர்ந்துள்ளார்.
அதில், கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும்போது சந்தித்த சவால்கள், மலையேற்றத்தில் இருந்த சிரமங்கள், உடல் சோர்வு, கடும் குளிர் போன்றவை குறித்தும், அதனை எதிர்கொண்டு இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடித்தது குறித்தும் நெகிழ்ச்சியுடன் பவித்ரா பதிவிட்டுள்ளார்.
சின்ன திரை நாயகியான பவித்ரா பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலரும் பொறுமையிழந்து உண்மை முகத்தை வெளிக்காட்ட, பவித்ரா மட்டும் சாந்தமான குணத்தை விட்டு மாறாமல், தன்னுடைய உண்மையான சுபாவமே பொறுமைதான் என்பதை நிரூபித்திருந்தார். இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் வித்தியாசமான போட்டியாளராக இருந்து பலரைக் கவர்ந்தார்.

கேதார்நாத் பயணத்தில்... - இன்ஸ்டாகிராம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் வந்து என்னைத் தொடும் தொடரில், நாயகியாக நடித்திருந்த பவித்ரா, இதற்கு முன்பு ஈரமான ரோஜாவே, பகல் நிலவு, ராஜா ராணி, ஆஃபிஸ், சரவணன் மீனாட்சி உள்ளிட்டத் தொடர்களில் நடித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு தமிழில் எடுக்கப்பட்டு ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் காந்தாரியாக நடித்து சின்ன திரைக்கு அறிமுகமானவர். தொடர்ந்து பல்வேறு சவாலான பாத்திரங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை நிரூபித்தவர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அடிக்கடி ஆன்மிக பயணம் மேற்கொண்டுவரும் பவித்ரா, சமீபத்தில் கேதார்நாத் பயணம் மேற்கொண்டிருந்தார்.

கேதார்நாத்தில் பவித்ரா... - இன்ஸ்டாகிராம்
இந்தப் பயணம் குறித்து பவித்ரா பதிவிட்டுள்ளதாவது,
''கேதார்நாத் பயணம் என்பது என் வாழ்வின் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட மற்றும் உடல்ரீதியாக சவால் நிறைந்த ஒரு பயணமாகும். விடியோவில் நீங்கள் பார்க்கும் எதுவும் உண்மையான போராட்டத்தைப் பதிவு செய்ததல்ல. மலையேற்றத்தை விட கீழே இறங்கும்போது நான் முற்றிலும் உடைந்துபோனேன். இது அனைத்தும் இருந்தாலும், நான் இப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளேன். அந்தத் தருணத்தில் என் கனவு நனவானதை உணர்ந்தேன்.
இந்த மலையேற்றத்தை என் சகிப்புத்தன்மைக்கான பரிசோதனையாக நான் பார்க்கிறேன். இது வெறும் மலையேற்றம் மட்டும் அல்ல; ஆன்மிகம் மற்றும் உணர்வுப்பூர்வமான பயணம். இதனை ஒருபோதும் மறக்கமாட்டேன். என்னுடன் பயணித்த, என்னை கவனித்துக்கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்'' பவித்ரா ஜனனி.
பவித்ராவின் ஆன்மிக ஈடுபாடு மற்றும் உறுதித்தன்மையை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | ஜீ தமிழில் கூடுதல் நேரம் ஒளிபரப்பாகும் இரு தொடர்கள்! காரணம் என்ன?
Summary
serial actress and Bigg Boss contestant Pavithra Janani undertook a spiritual journey to Kedarnath.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிக் பாஸ் - 10 ஒளிபரப்பு எப்போது?

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் செளரவ் கங்குலி!
சின்னதிரை: பிக்பாஸ் காமன் மேன்

காதலனுடன் விடியோ வெளியிட்ட நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன்!
விடியோக்கள்

மேகதாது விவகாரத்தில் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு உச்ச நீதிமன்றம்: அமைச்சர் நிர்மல் குமார்



