விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று(ஜூலை 7) தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.
இதனிடையே, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் பி.ஆறுமுகக் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த அவரது 51-வது படமான ஏஸ் (Ace) படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கினின் டிரெயின் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக தலைவன் தலைவி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கினின் டிரெயின் படமும் திரைக்கு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடிக்கிறார்.
பான் இந்திய மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி கவுர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில், இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று(ஜூலை 7) ஹைதராபாத்தில் துவங்கியது.
இந்த மிக பிரம்மாண்டத் திரைப்படத்தை, பூரி கனெக்ட்ஸ் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் JB மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நாராயண ராவ் கொண்ட்ரொல்லா இணைந்து தயாரிக்கின்றனர். சார்மி கௌர் இப்படத்தை வழங்குகிறார்.
மேலும் இப்படத்தில் தபு மற்றும் விஜய் குமார் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த திரைப்படம், இந்தியா முழுவதும் ரசிகர்களை ஈர்க்கும் நோக்கத்தில், தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
The shooting of actor Vijay Sethupathi's new film directed by Puri Jagannath has begun today (July 7).
இதையும் படிக்க: டிமான்ட்டி காலனி - 3 படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.