தெலுங்குப் பெண்ணாக மாறிய காவ்யா அறிவுமணி!

தெலுங்குப் பெண் எப்படி இருப்பார் என்பதை தனது நடிப்பின் மூலம் நடிகை காவ்யா அறிவுமணி செய்துகாட்டியுள்ளார்.
actress Kaavya arivumani
காவ்யா அறிவுமணிஇன்ஸ்டாகிராம்
Published on
Updated on
2 min read

தெலுங்குப் பெண் எப்படி இருப்பார் என்பதை தனது நடிப்பின் மூலம் நடிகை காவ்யா அறிவுமணி செய்துகாட்டியுள்ளார். இது குறித்து விடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில், ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

சின்ன திரையில் பிரபலமாகி தற்போது சினிமாவிலும் நடிகையாக மாறியுள்ள காவ்யா அறிவுமணி, தொடர்ந்து திரைப்படங்களுக்கான நடிகை தேர்வுகளில் (ஆடிஷன்) பங்கேற்று வருகிறார். நடிகையாகிவிட்டதால் தன்னைத் தேடி வரும் கதைகளில் நடிக்கலாம் என்று இருந்துவிடாமல், தனக்கான கதைகளையும், பாத்திரங்களையும் தேடிச் செல்வதாக காவ்யா அறிவுமணி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதேபோன்று அலங்கார உடை அணிந்து புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்துவரும் நடிகைகளுக்கு மத்தியில், அவை ஏதுமின்றி நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையான விடியோக்களை காவ்யா அறிவுமணி பகிர்ந்து வருகிறார்.

காவ்யா அறிவுமணி
காவ்யா அறிவுமணி இன்ஸ்டாகிராம்

அந்தவகையில் சமீபத்தில் தெலுங்குப் பெண் எப்படி இருப்பார் என்பதை தத்ரூபமாக நடித்துக் காட்டியுள்ளார். வீட்டில் இருக்கும் சராசரி தெலுங்குப் பெண்களைப் போன்று பாவாடை தாவணி அணிந்து, அவர்கள் செய்யும் செய்கைகளை விடியோவில் காவ்யா பதிவு செய்துள்ளார்.

காவ்யா அறிவுமணி
காவ்யா அறிவுமணி இன்ஸ்டாகிராம்

பல தெலுங்குப் படங்களில் தெலுங்குப் பெண்களை காட்டும் பொதுவான பாணியில் அவர் இதனைச் செய்துள்ளார். இதற்கு முன்பு சமந்தா, காஜல் அகர்வால், சாய்பல்லவி போன்ற நடிகைகள் தெலுங்குப் படங்களில் நடிக்கும்போது இருக்கும் தோற்றத்தில் காவ்யா அறிவுமணி நடித்து காட்டியுள்ளார்.

அவரின் இந்த விடியோவில் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

காவ்யா கடந்த பாதை

2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா தொடரில் அறிவுமணி என்ற பாத்திரத்தில் சின்ன திரையில் அறிமுகமானார் காவ்யா அறிவுமணி.

பின்னர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற பாத்திரத்தில் விஜே சித்ராவுக்கு பதிலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில், காவ்யாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சின்ன திரையில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து வெள்ளித் திரையிலும் நடிக்க அடிக்கடி ஆடிஷன் கொடுத்து வந்த நிலையில், மிரள் படத்தில் 2022-ல் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 2023-ல் ரிப்பப்பரி, 2025-ல் நிறம் மாறும் உலகில் என அடுத்தடுத்த படங்களில் நடித்து அசத்தினார். தற்போது ஏராளமானப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | கெளரி சீரியலில் புனிதாவுக்கு மாற்றாக புதிய நடிகை!

Summary

Actress Kavya Arivumani has shown what a Telugu woman should be like through her acting.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com