
டிமான்ட்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்திலும் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கவுள்ளார்.
திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.
விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான டிமான்ட்டி காலனி - 2 திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்தது.
இந்த நிலையில், டிமான்ட்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தை மீண்டும் அருள்நிதி வைத்து எடுக்க அஜய் ஞானமுத்து திட்டமிட்டு இருந்த நிலையில், அண்மையில், சென்னையில் உள்ள முருகன் கோயிலில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
இப்படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கவுள்ளதை அவரே, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படத்தில் டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகத்தில் நடித்த மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு, சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: ஆல்யா மானசாவின் புதிய தொடர்: படப்பிடிப்பு தொடக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.