விவாகரத்தா? நயன்தாரா பதில்!

விவாகரத்து வதந்தி குறித்து நயன்தாரா பதில்...
nayanthara and vignesh shivan
விக்னேஷ் சிவன், நயன்தாரா.
Published on
Updated on
1 min read

நடிகை நயன்தாரா தன்னைக் குறித்த வதந்திகளுக்குப் பதிலளித்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். நீண்டகாலமாகக் காதலித்து வந்த இந்த இணை, பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்ததுடன் தங்களின் திருமண நிகழ்வை ஆவணப்படுத்தி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.

தொடர்ந்து, வாடகைத் தாய் மூலம் இந்த இணைக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு உயிர், உலக் எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் விவாகரத்து முடிவில் இருப்பதாக நிறைய வதந்திகள் பரவின. மேலும், சில செய்தி நிறுவனங்களும் செய்திகளாக மாற்றி வெளியிட்டன.

விக்னேஷ் சிவன், நயன்தாரா
விக்னேஷ் சிவன், நயன்தாரா

தற்போது, இந்த வதந்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக நயன்தாரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவனுடன் வேடிக்கைப் பார்க்கும் கோணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, “எங்களைக் குறித்த வதந்திகளைப் பார்க்கும்போது எங்களின் ரியாக்‌ஷன்” என நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார்.

இதன் மூலம், இருவருக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை நயன்தாரா உறுதிபடுத்தியிருக்கிறார்.

Summary

nayanthara and vignesh shivan reacts amid divorce romours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com