
விம்பிள்டன் வென்ற யானிக் சின்னருக்கு விம்பிள்டன் நிர்வாகம் விஜய்யின் ஜன நாயகன் பட பாணியில் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.
புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த யானிக் சின்னரும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் அல்கராஸும் இறுதிப் போட்டியில் மோதினார்கள்.
இந்தப் போட்டியில் முதல் செட்டில் 4-6 என இழந்த யானிக் சின்னர் அடுத்தடுத்த செட்டுகளில் 6-4, 6-4, 6-4 என ஆதிக்கம் செலுத்தி வென்றார்.
யானிக் சின்னருக்கு இது முதல் விம்பிள்டன் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக விம்பிள்டன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜய்யின் ஜன நாயஜன் பட பாணியில் சின்னருக்கு சிறப்புப் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.
இந்தப் போஸ்டரில் விஜய் ரசிகர்கள், “அட்மின் எவனோ நம்ம பையன்தான்...” என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
விஜய்யின் போஸ்டரையும் அவரின் படங்களின் பெயரையும் பயன்படுத்துவது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே, மாஸ்டர் போஸ்டரையும் விம்பிள்டன் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.