
பிரபல நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிக்கும் புதிய தொடரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆடுகளம் தொடர் நடிகர் சல்மானுல் பாரிஸ், ஆஹா கல்யாணம் தொடர் நடிகை காயு ஸ்ரீ பிரதான பாத்திரங்களில் நடிக்கும் புதிய தொடரின் முதல் நாள் படப்பிடிப்பு நேற்று(ஜூலை 16) நடைபெற்றது.
மேலும், அண்ணா தொடர் பிரபலம் அபினாஷ் கணபதி, பிரிதிவிராஜ், ஈஸ்வர் என பிரதான நடிகர்களின் கூட்டணி இந்தத் தொடரில் இணைந்துள்ளது, இந்தத் தொடருக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய தொடருக்கு திருமாங்கல்யம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. குடும்பத்தில் பாரம்பரியங்கள் மற்றும் சமகால சூழலில் நடக்கும் பிரச்னைகள் இடையே நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்படுகிறது.
இந்தத் தொடரின் முதல் நாள் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக நடிகர் அபினாஷ் கணபதி புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
சிவபாலன் இயக்கும் திருமாங்கல்யம் தொடரை ஆர்ஆர் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்தொடர் முக்கியத்துவம் பெறும் (பிரைம் டைம்) நேரத்தில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள இந்தத் தொடரின் முன்னோட்ட விடியோ, ஒளிபரப்பு விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.