ஒரு முத்தம், ஒரு சத்தியம்... காதலரை அறிமுகப்படுத்திய தான்யா ரவிச்சந்திரன்!

நடிகை தான்யா ரவிச்சந்திரனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது குறித்து....
தான்யா ரவிச்சந்திரன்.
தான்யா ரவிச்சந்திரன்.
Published on
Updated on
1 min read

நடிகை தான்யா ரவிச்சந்திரனுக்கும் பென்ஸ் படத்தின் ஒளிப்பதிவாளர் கெளதம் ஜார்ஜுக்கும் சென்னையில் நேற்று(ஜூலை 15) திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் பிரபலமான பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்திதான் நடிகை தான்யா ரவிச்சந்திரன். இவர் சசிகுமாரின் பலே வெள்ளையத் தேவா படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரது நடிப்பு பெரிதாகப் பேசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தான்யா ரவிச்சந்திரன், பிருந்தாவனம், கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், ரசவாதி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

பேப்பர் ராக்கெட் இணையத் தொடரில் இவரின் இயல்பான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வருகிறார்.

நடிகை தான்யா ரவிச்சந்திரன், ஸ்நேகாவுடன் பிரபல துணிக்கடை விளம்பரத்தில் நடித்து பிரபலமடைந்து, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

இந்நிலையில், நடிகை தான்யா ரவிச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

பென்ஸ் படத்தில் நடிக்கும்போது அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் கெளதம் ஜார்ஜ் உடன் ஏற்பட்ட நட்பு, காதலாக மலர்ந்து, தற்போது இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

தான்யா - கெளதம் இவருக்கும் அவர்களுடைய ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: டிஎன்ஏ ஓடிடி தேதி!

Summary

Actress Tanya Ravichandran and cinematographer Gautham George of the film Benz got engaged yesterday (July 15) in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com