டிஎன்ஏ ஓடிடி தேதி!

டிஎன்ஏ ஓடிடி தேதி!

அதர்வா, நிமிஷா நடித்த டிஎன்ஏ படத்தின் ஓடிடி தேதி...
Published on

நடிகர் அதர்வாவின் டிஎன்ஏ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியானது.

குழந்தைக் கடத்தலை மையமாக வைத்து எமோஷனல் த்ரில்லராக உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பதிவு செய்தது.

முக்கியமாக, அதர்வா மற்றும் நிமிஷாவின் நடிப்பும் படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் நன்றாக இருந்ததாக விமர்சனங்களில் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வருகிற ஜூலை 19 ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

atharvaa and nimisha's DNA movie ott date

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com