ரொமான்டிக் காமெடி திரைப்படமான பூக்கி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் உருவான புதிய படம் “பூக்கி”. இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கிய இந்தப் படத்தின் மூலம் நடிகர் அஜய் திஷான் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இவர் மார்கன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்தப் படத்தில் அஜய் திஷான் மற்றும் தனுஷா நடித்துள்ளனர்.
மேலும் பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் எடிட்டிங்கை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார்.
பிரிவை விரும்பும் நிலையில் இருந்தும் ஒருவரை ஒருவர் இன்னும் நேசித்து கொண்டிருப்பதை உணர்ந்து, குழப்பத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு காதல் ஜோடியின், உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை நகைச்சுவையுடன் ‘பூக்கி’ திரைப்படம், எடுக்கப்பட்டுள்ளது.
நவீன உறவுகளின் குழப்பம், பாசம் மற்றும் முரண்பாடுகளை இந்தப் படம் சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளது.
படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் எடிட்டரான விஜய் ஆண்டனி கூறுகையில், “‘பூக்கி’ வெளிப்படையாக ஒரு எளிய கதையாக தோன்றினாலும், இன்றைய உறவுகளில் உள்ள உண்மையான உணர்வுகளை பிரதிபலிக்கிறது. இயக்குநர் கணேஷ் சந்திரா இந்தப் படத்திற்கு புதிய உற்சாகத்தையும் உண்மையான உணர்வுகளையும் கொண்டு வந்துள்ளார். நகைச்சுவையும் உணர்ச்சியும் ஒன்றாக கலந்து, அனைவரும் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளது” என்றார்.
இந்த நிலையில், ‘பூக்கி’ திரைப்படம் வரும் மார்ச் 13 முதல் ஜீ5 ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது.
Summary
The OTT release date of the romantic comedy film Pookie has been officially announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிஸ்டர் எக்ஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

துரந்தர் - 2 : அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீட்டுத் தேதி!

வாழ - 2 படத்தின் ஓடிடி தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சதீஷின் முஸ்தபா முஸ்தபா படத்தின் வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




