கூலி இசை வெளியீட்டு விழா அறிவிப்பு: எங்கு? எப்போது?

கூலி இசை வெளியீட்டு விழா அறிவிப்பு தொடர்பாக...
கூலி படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த்
கூலி படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த்இன்ஸ்டாகிராம்
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆக. 2 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாக பல சாதனைகளைச் செய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

கூலி திரைப்படம் உலகளவில் 5000-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இப்படத்தில், அமீர்கான், நாகர்ஜுனா, சத்யராஜ், பகத் பாசில், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆக. 2 ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 2 ஆம் தேதியே வெளியிடப்படும் என்று தெரிகிறது.

Summary

The audio launch of actor Rajinikanth's Coolie will be held on August 2nd, the film crew has announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com