
தொடரில் நாயகியின் முழு பாத்திரத்தை சின்னஞ்சிறு கிளியே குழுவினர் இரு வார்த்தைகளில் பகிர்ந்துள்ளனர். இதனுடன், தொடரில் நாயகியின் பாத்திரத்தை பிரதிபலிக்கும் வகையிலான புகைப்படங்களையும் குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு சின்னஞ்சிறு கிளியே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நாயகியாக ஸ்வாசிகாவும், நாயகனாக நரேஷும் நடிக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி ரெளத்திரம் சையத், மதுமிதா, அபிதா, ஆறுமுக வேலு, காயத்ரி உள்ளிட்டப் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பைக் டாக்ஸி ஓட்டுவது, உணவு விநியோகம் செய்வது, மாலை நேரங்களில் டியூஷன் எடுப்பது என பலவேலைகளைச் செய்து அதன்மூலம் பொருளீட்டி தனது குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் கதாநாயகிதான் ஸ்வாசிகா. இவர் இந்து என்ற பாத்திரத்தில் சின்னஞ்சிறு கிளியே தொடரில் நடித்து வருகிறார்.
சூழல் காரணமாக கந்துவட்டியில் பணத்தை சம்பாதிக்கும் ஆணாதிக்கம் பிடித்த குடும்பத்தைச் சேர்ந்த நாயகனை திருமணம் செய்துகொண்டு, புகுந்த வீட்டில் அவர் சந்திக்கும் சவால்களே சின்னஞ்சிறு கிளியே தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு, அந்த வீட்டில் ஏற்கெனவே மருமகள்களாக வந்த மேலும் சில பெண்களைப் பற்றியும் இத்தொடர் பேசுகிறது.
முழுக்க முழுக்க பெண்கள் மேம்பாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இத்தொடரில், நாயகி பணத்தை விரையம் செய்யாதவளாக காட்டப்படுகிறாள். இதனால், நாயகியை பட்ஜெட் ராணி என்ற பெயரில் குறிப்பிட்டு, சிறு விடியோவை இத்தொடரின் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அந்த விடியோவில் அவர் பைக் டாக்ஸி ஓட்டுவது, உணவு விநியோகம் செய்வது, எனப் பல வேலைகளைச் செய்வது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. நாயகியின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் வகையில், வெளியிடப்பட்டுள்ள இந்த விடியோ ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிக்க | இனி, சனிக்கிழமையிலும் ஒளிபரப்பாகும் இரு தொடர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.