ஹார்ட் பீட் - 2 தொடரில் இணையும் பிக் பாஸ் பிரபலம்!

ஹார்ட் பீட் - 2 தொடரில் இணைந்துள்ள பிக் பாஸ் பிரபலம் நடிகை சாச்சனா.
நடிகை சாச்சனா
நடிகை சாச்சனா
Published on
Updated on
1 min read

ஹார்ட் பீட் - 2 தொடரில் பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான சாச்சனா இணைந்துள்ளார்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள், தாய் - மகள் இருக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம் ஆகியவற்றை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்படுகிறது.

ஹார்ட் பீட் முதல் பாகத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பையடுத்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கி டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் ஹார்ட் பீட்- 2 வெப் தொடரில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இத்தொடரின் கதையின்படி அனுமோலின்(ரதி) மகளான தீபா பாலுவை(ரீனா) குழந்தையாக இருக்கும்போது ரதி காப்பகத்தில் விட்டு விடுகிறார். பின்னர் வேறொருவரை ரதி திருமணம் செய்துகொள்கிறார்.

இந்த நிலையில் ரீனாவின் தந்தை அறிமுகமாகும் காட்சிகள் ஒளிபரப்பான நிலையில், ரதியின் கடந்த கால வாழ்க்கை(ஃபிளாஷ் பேக்) தொடர்பான காட்சிகள் காண்பிக்கப்படுகிறது.

இதில், சிறு வயது ரதியாக நடிகை சாச்சனா நடிக்கிறார். இது தொடர்பான காட்சிகள் இன்று(ஜூலை 31) வெளியான எபிசோடுகளில் காண்பிக்கப்பட்டுள்ளன.

ரீனாவின் தந்தை விஜய்யின் சிறுவயது பாத்திரத்தில் நடிகர் ரோஷன் நடிக்கிறார்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த மஹாராஜா படத்தில் அறிமுகமாகி பிரபலமான சாச்சனா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Bigg Boss celebrity and actress Sachana has joined the Heartbeat - 2 series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com