
விஜய் தொலைக்காட்சியில் 3 புதிய தொடர்கள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களைப் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர். தற்போது உள்ள சூழலில் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளைய தலைமுறையினரும் தொடர்களை விரும்பிப் பார்க்கின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட தொடர்கள் மக்கள் மனதை வென்று டிஆர்பியில் முன்னணியில் உள்ளன.
இந்த நிலையில், டிஆர்பி கூட்டுவதற்கு விஜய் தொலைக்காட்சியில் 3 புதிய தொடர்கள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன.
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் தொடர் நாளை முதல் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஒளிபரப்பு செய்யப்பட்ட திகில் தொடரான அதே கண்கள் தொடர் நாளை முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
வந்தனா மைக்கல் மற்றும் அறிமுக நடிகர்கள் பலர் நடிக்கும் தென்றலே மெல்ல பேசு என்ற தொடர் ஜூன் 9 முதல் பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஐஏஎஸ் கனவு என்றொரு மாயவலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.