
நடிகர் கமலின் புதிய புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் படத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி என முக்கியமான நடிகர், நடிகைகள் நடித்துள்ளார்கள்.
இந்தப் படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் நிலையில் முன்பதிவுகளில் அசத்தி வருகிறது.
குறிப்பாக இன்று இபிஐக்யூ திரையரங்குகளின் முன்பதிவு தொடங்கிய நிலையில் அதிகமான டிக்கெட்டிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மொழி குறித்து கமல் பேசியது கர்நாடகத்தில் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தக் லைஃப் படம் அங்கு வெளியாகாது எனக் கூறப்படுகிறது.
கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பினாலும் தமிழகத்தில் நடிகர் கமலுக்கு ஆதரவு பெருகியுள்ளது.
இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் புதிய புகைப்படங்களை வெளியிட்டு, “உண்மைக்காக பிறந்தவர், சண்டைக்காக உருவாக்கப்பட்டவர்” எனக் கூறியுள்ளார்.
கமல் ரசிகர்கள் அவரது துணிச்சலை மிகவும் பாராட்டி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.