
கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் மேக்கிங் விடியோ வெளியானது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் 38 ஆண்டுகளுக்குப் பிறகு நடித்துள்ளதால் தக் லைஃப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தப் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி என முக்கியமான நடிகர், நடிகைகள் நடித்துள்ளார்கள்.
இந்தப் படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் நிலையில் முன்பதிவுகளில் அசத்தி வருகிறது.
கன்னட மொழி விவகாராத்தினால் கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாளை (ஜூன்.5) காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழாங்கியுள்ளது.
இந்நிலையில், படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் “அடப்பாவிங்களா, இந்த மாதிரி காட்சிகளை இவ்வளவு தாமதமாகவா வெளியிடுவது? நிச்சயமாக படம் ஹிட் அடிக்கும்!” எனக் கூறி வருகிறார்கள்.
ராஜ் கமல் ஃபிலிம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.