
விஜய் சேதுபதி நடித்துள்ள தலைவன் தலைவி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன், யோகி பாபு நடிப்பில் புதிய படம் உருவாகியுள்ளது.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
விஜய் சேதுபதி - பாண்டிராஜ் இணையும் முதல் படமென்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. காதல் கதையாக உருவான இப்படத்திற்கு ‘தலைவன் தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தலைவன் தலைவி படத்தின் முதல் பாடலான பொட்டல மொட்டாயே பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இப்பாடலை சுப்லக்ஷினி உடன் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். வரிகளை விவேக் எழுதியுள்ளார்.
இதையும் படிக்க: பாலகிருஷ்ணாவின் அகண்டா -2 டீசர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.