பெயர் மாற்றப்பட்ட ‘தி தில்லி ஃபைல்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு!

பெயர் மாற்றப்பட்ட ’தி தில்லி ஃபைல்ஸ்’ திரைப்படத்தின் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
டீசரில்...
டீசரில்...யூடியூப்
Published on
Updated on
1 min read

பெயர் மாற்றப்பட்ட ’தி தில்லி ஃபைல்ஸ்’ திரைப்படத்தின் புதிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் அதிர்வலைகளையும், சர்ச்சைகளையும் உருவாக்கிய படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. அதன் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கும் புதிய படத்தின் பெயர் ‘தி தில்லி ஃபைல்ஸ்’ எனப் படக்குழு அறிவித்திருந்தது.

உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு புதிய திரைப்படத்துடன் வருகிறோம், என விளம்பரப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் பெயர் ‘தி பெங்கால் ஃபைல்ஸ்’ என மாற்றப்பட்டுள்ளதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், திரைப்படத்தின் புதிய டீசரை அதன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது யூடியூப் பக்கங்களில் வெளியிட்டுள்ளன. இந்த டீசரில், உங்களை காஷ்மீர் காயப்படுத்தியிருந்தால், பெங்கால் பயமுறுத்தும்’ எனும் வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில், பிரபல பாலிவுட் நடிகரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான மிதுன் சக்கரவத்தி, நடிகர்கள் தர்ஷன் குமார், அனுபம் கெர் மற்றும் பல்லவி ஜோஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படம், 1946 ஆம் ஆண்டு வங்காளப் பகுதிகளில் நடைபெற்ற வன்முறைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

முன்னதாக, இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, முன்னாள் பிரதமர் லால் பஹதூர் சாஸ்திரியின் மரணத்தை மையமாகக் கொண்டு கடந்த 2019-ம் ஆண்டு ‘தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ்’ எனும் படத்தை இயக்கியுள்ளார்.

பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு மிகப் பெரியளவில் ஆதரவுகள் மற்றும் கண்டனங்களைப் பெற்ற ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ எனும் படத்தையும் அவர் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா? அதுல்யா விளக்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com