திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா? அதுல்யா விளக்கம்!

முக அறுவை சிகிச்சை குறித்து விளக்கமளித்துள்ளார் நடிகை அதுல்யா...

News image

அதுல்யா ரவி

Updated On :12 ஜூன் 2025, 1:33 pm IST

நடிகை அதுல்யா முக அறுவை சிகிச்சை குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

காதல் கண் கட்டுதே, அடுத்த சாட்டை, கேப் மாரி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை அதுல்யா ரவி. கச்சிதமான தோற்றத்தில் இருப்பவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் வைரலாவார்.

ஆனால், முகம் முன்பைவிட பளபளப்பாகவும் சீராகவும் இருப்பதால் ரசிகர்கள், அதுல்யா முக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் எனக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், இவர் நடித்த மெட்ராஸ் சிட்டி கேங்ஸ்டர் பட நிகழ்வில், “நீங்கள் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக முகத்தில் அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறுகிறார்களே, உண்மையா?” எனக் கேட்கப்பட்டது.

அதுல்யா ரவி

அதுல்யா ரவி

அதற்கு அதுல்யா, “நான் முக அறுவை சிகிச்சையெல்லாம் செய்யவில்லை. ஏன் என்னைக் குறித்த வதந்திகள் பரவுகின்றன எனத் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.