
நடிகர் அஜித் குமார் கார் ரேஸ் பணிகளை முடித்து சென்னைக்குத் திரும்பினார்.
நடிகர் அஜித் குமார் நடிப்பையும் கார் ரேஸையும் இரு கண்களாக பார்த்து வருகிறார். 6 மாதம் சினிமா படப்பிடிப்பிலும் 6 மாதம் கார் ரேஸிலும் இருப்பேன் என சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது.
குட் பேட் அக்லி திரைப்படம் ரூ.282 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவித்தன.
நடிகர் அஜித் அடுத்ததாக யாருடன் இணைந்து நடிப்பார் என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், ஏகே - 64 படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவார் எனவும் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியது.
குட் பேட் அக்லி படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அஜித் சென்னைக்குத் திரும்பியதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.