குடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுதொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவா்கள் துரோகிகள்! - ராகுல் காந்திஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐஜூலையில் ஜிஎஸ்டி ரூ. 2.11 லட்சம் கோடி வசூல் - 15.4% அதிகரிப்பு! சநாதனத்தை அவமதித்ததாகப் புகாா்! ராகுல் உள்பட 3 எம்.பி.க்கள் மீது வழக்குப் பதிவு!
/

மாமியார் பிரியா ராமன் பிறந்தநாளைக் கொண்டாடிய மருமகள் ஷபானா!

செம்பருத்தி தொடருக்குப் பிறகு, பிரியா ராமன் - ஷபானா மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

News image

பிரியா ராமனுடன் ஷபானா - படம் - இன்ஸ்டாகிராம்

Updated On :18 ஜூன் 2025, 4:57 pm IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், நடிகை பிரியா ராமனுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இதில், பிரியா ராமனுக்கு சின்ன திரை நடிகை ஷபானா நெகிழ்ச்சியுடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான விடியோவை சமூக வலைதளப் பக்கத்திலும் ஷபானா பகிர்ந்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி அரங்கில்...

குக் வித் கோமாளி நிகழ்ச்சி அரங்கில்... - இன்ஸ்டாகிராம்

இது குறித்து ஷபானா வெளியிட்டுள்ள பதிவில், ''எனக்கு மிகவும் நெருக்கமான நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மிகுந்த இரக்கம் கொண்டது நீங்கள் காட்டும் அன்பு. அது எதையும் எதிர்பார்க்காமல், அனைத்தையும் தருகிறது. கடினமான சூழல்களிலும் அது மாறாமல் இருக்கிறது. இதற்கு இறுதிக்காலம் வரை நன்றிக்கடன்பட்டுள்ளேன். அழகான ஆன்மாவுடைய உங்களை நாங்கள் கொண்டாடுகிறோம். நான் விரும்பும் அளவுக்கு புகழும் உங்களை விரும்புகிறான்'' எனப் பதிவிட்டு, நடிகர் புகழுடன் இருக்கும் விடியோவையும் பதிவிட்டுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி சாதனை படத்தை தொடர் செம்பருத்தி. இந்தத் தொடரில் மாமியாராக நடித்த பிரியா ராமனுக்கு நடிகை ஷபானா மருமகளாக நடித்திருந்தார். இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று, ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்களுக்கான டிஆர்பி பட்டியலிலும் முதலிடம் வகித்தது.

செம்பருத்தி தொடர்

செம்பருத்தி தொடர் - இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், பிரியா ராமன் - ஷபானா மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரியா ராமனுக்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உற்சாகமாக பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இதில், பிரியா ராமன் குறித்து ஷபானா பகிர்ந்த கருத்துகள் பலரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. மாமியாருக்கு மருமகள் பிறந்தநாள் கொண்டாடியுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.