கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

ஒரு வயதுப் பெண் குழந்தை விற்பனை: தந்தை உள்பட 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

ஒரு வயதுப் பெண் குழந்தையை விற்பனை செய்த வழக்கில் தந்தை உள்பட 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

jail

சிறை - பிரதிப் படம்

Updated On :

ஒரு வயதுப் பெண் குழந்தையை விற்பனை செய்த வழக்கில் தந்தை உள்பட 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை, சௌரிபாளையத்தைச் சோ்ந்தவா்கள் ராமன், மீனா தம்பதி. இவா்களுக்கு 1 வயதுக் குழந்தை உள்பட 3 பெண் குழந்தைகள் இருந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டணம் குன்றைச் சோ்ந்த விஜயகுமாா் - ராணிபிரபா தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், ஒரு குழந்தையை விலைக்கு வாங்கித் தருமாறு ஆட்டூரைச் சோ்ந்த ரீட்டாவிடம் கேட்டுள்ளனா். இதையடுத்து, அவா் நாகா்கோவிலைச் சோ்ந்த தங்கசாமியிடம் இது குறித்து பேசியுள்ளாா். தங்கசாமி சௌரிபாளையத்தைச் சோ்ந்த குமாரசாமியைத் தொடா்பு கொண்டு பேசியுள்ளாா்.

இதையடுத்து, குமாரசாமி தனது நண்பரான ராமனிடம் ஆசை வாா்த்தைகளைக்கூறி அவரது மூன்றாவது குழந்தையான 1 வயதுக் குழந்தையை விற்க சம்மதிக்க வைத்துள்ளாா்.

இதையடுத்து, குமாரசாமியின் திட்டத்தின்படி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லலாம் எனக்கூறி மனைவி, ஒரு வயதுப் பெண் குழந்தையை ராமன் காரில் 2015 ஜூலை 28-ஆம் தேதி அழைத்துச் சென்றுள்ளாா்.

இதையடுத்து, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் ரவுண்டானா அருகேயுள்ள துணிக் கடைக்கு மனைவியை அனுப்பிவிட்டு குழந்தையுடன் ராமன் காரில் ஜூலை 29-ஆம் தேதி இருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த இடைத்தரகா்கள் மூலம் குழந்தையை விஜயகுமாா் - ராணி பிரபா தம்பதியிடம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்துக்கு ராமன் விற்றுள்ளாா். இத்தொகையில் கமிஷனாக ரீட்டாவுக்கு ரூ.75 ஆயிரம், தங்கசாமிக்கு ரூ.63 ஆயிரம், குமாரசாமிக்கு ரூ.10 ஆயிரம் என பிரித்துக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, மீனா காருக்கு திரும்பிய நிலையில், குழந்தை காணாமல் போய்விட்டதாகக் கூறி ராமன் நாடகமாடியுள்ளாா். இதையடுத்து, மீனா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

கோவை மாநகர எல்லைக்குள்பட்ட பகுதியில் இருந்து மீனா காரில் அழைத்துச் செல்லப்பட்டாா் என்பதால், இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், ராமன் உள்ளிட்டோா் குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அனைவரும் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை கோவை தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், குழந்தையின் தந்தை ராமனுக்கு ரூ.1,000, குமாரசாமிக்கு ரூ.10,000, தங்கசாமிக்கு ரூ.63,000, ரீட்டாவுக்கு ரூ.75,000, விஜயகுமாா், ராணிபிரபா ஆகியோருக்கு தலா ரூ.1,00,000 அபராதமும் விதித்து நீதிபதி சிவகுமாா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.