பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதா? - கார்த்திகா கைதுக்கு பிரேமலதா கண்டனம்!மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

4 மாதங்கள்.. காக்கிநாடா பெண் குழந்தை எங்கே? விடை காணப்படாமல் விடப்பட்ட கதை!

காக்கிநாடாவில் 2 வயது பெண் குழந்தை மாயமாகி 4 மாதங்களுக்கும் மேல் ஆகியும்....

காக்கிநாடா குழந்தை

துண்டு பிரசுரம் - பிரதி படம் - File photo

Updated On :

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் கடந்த ஜூன் 6ஆம் தேதி காணாமல் போன 2 வயது குழந்தை இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. குழந்தைக்கு என்ன நேர்ந்தது, குழந்தை உயிரோடு இருக்கிறதா என எதுவும் தெரியாமல் குழந்தையை தேடும் பணி கைவிடப்பட்டுள்ளது.

குழந்தையுடன் காணாமல் போனதாகக் கருதப்பட்டு திரும்பி வந்த மரணித்த நாயின் தடயவியல் சோதனைகள் மூலம் தெரிய வந்தது என்ன? நாய்க்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.

இதனால், நாட்டில் நாள்தோறும் எத்தனையோ குழந்தைகள் காணாமல் போகும் நிலையில், அவற்றை கண்டுபிடிக்காமல் தேடுதல் பணி கைவிடப்படுவது காக்கிநாடாவின் துனி என்ற குழந்தையின் வாழ்விலும் தொடர்கிறது.

குழந்தையின் புகைப்படம், விவரங்கள், காணாமல் போனது குறித்த தகவலுடன், குழந்தையைப் பற்றி ஏதேனம் தகவல் தெரிந்தாலோ அல்லது அன்றைய நாளில் குழந்தையை எங்கேனும் பார்த்திருந்தாலோ தகவல் தெரிவிக்குமாறு தொலைபேசி எண்களுடன் துண்டுப் பிரசும் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், குழந்தையை யாரும் பார்த்திருக்காவிட்டால்... யார் தகவல் சொல்வார்கள்?

அது மட்டுமா? குழந்தையைக் கண்டுபிடிக்க பயனுள்ள தகவல்களை தருபவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை ஒரு துப்பும் துலங்கவில்லை.

குழந்தை எங்கே?

துனி என்ற கிராமத்தில் ஜூன் 6ஆம் தேதி குழந்தை காணாமல் போன நிலையில், நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும் டிரோன்கள் மூலமும், 400 காவல்துறையினர் தேடியும் இதுவரை ஒரு சிறு துப்பு கூட கிடைக்கவில்லை.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பாமாயில் பண்ணைக்கு அருகே வாழ்ந்து வந்த தம்பதிகளின் 2 வயது குழந்தையை பேரிடர் மீட்புப் படை வீரர்களும் தேடினர். கிடைக்கவில்லை.

முதலில், வனவிலங்குகள் ஏதேனும் குழந்தையை தூக்கிச் சென்றிருக்குமா என்ற அச்சத்தில், காவல்துறையினர், வனப்பகுதிக்கு அருகே பொம்மைகளை உருவாக்கி அதற்குள் கறித் துண்டுகளை வைத்தனர். ஆனால், அந்த பொம்மை இருக்கும் இடத்துக்கு அருகே எந்த வன விலங்கும் வரவில்லை.

வீட்டுக்கு வெளியே குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, குழந்தையின் தந்தை பண்ணை வேலைக்குச் செல்வதைப் பார்த்து அவர் பின்னால் சென்றிருக்கிறது. பண்ணையில் தன்னைப் பின் தொடர்ந்து வந்த குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து வீட்டு வாசலில் விட்டுவிட்டு, மனைவியிடம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார்.

மனைவியோ, குழந்தை வீட்டுக்குள் வந்துவிட்டார், அங்குதான் இருப்பார் என்று நினைத்திருக்கிறார். ஆனால், குழந்தை வாசலை தாண்டி வெளியே சென்ற நிலையில் மாயமானது தெரிய வந்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். குழந்தையுடன் வீட்டின் வளர்ப்பு நாயும் பின்தொடர்ந்து சென்றுள்ளது.

குழந்தையுடன் மாயமான நாய் 2 நாள்களில் திரும்பி வந்தது. ஆனால், அசாதாரணமாக தென்பட்ட நாய் உணவெதுவும் சாப்பிடாமல் ஓரிரு நாள்களில் இறந்துவிட மக்களுக்கு மேலும் அதிர்ச்சி.

தேடுதல் பணி நடைபெற்று விசாரணைகள் தொடங்கின. ஆனால் எல்லாம் தொடங்கிய இடத்திலேயே வந்து நின்றது. குழந்தை எங்கே போனது? என்பதுதான் அது. நான்கு மாதங்கள் உருண்டோடிவிட்டன. குழந்தைக்கு என்னவாகியிருக்கும் என்ற கேள்விக்கு இன்னும் விடைதெரியாமல் கலங்கி நிற்கிறது ஒட்டுமொத்த கிராமமும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.