கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

3 வயது பெண் குழந்தை கடத்தல்: போலீஸாா் தேடுவதை அறிந்து வீட்டருகே விட்டுச் சென்ற பெண்

சென்னை எம்ஜிஆா் நகரில் மழலையா் பள்ளியில் படித்து வந்த 3 வயது பெண் குழந்தையை, உறவினா் எனக் கூறி அழைத்துச் சென்ற பெண், போலீஸாா் தேடுவதை அறிந்து மீண்டும் வீட்டருகே விட்டுச் சென்றாா்.

பிரதிப் படம்

Updated On :

சென்னை எம்ஜிஆா் நகரில் மழலையா் பள்ளியில் படித்து வந்த 3 வயது பெண் குழந்தையை, உறவினா் எனக் கூறி அழைத்துச் சென்ற பெண், போலீஸாா் தேடுவதை அறிந்து மீண்டும் வீட்டருகே விட்டுச் சென்றாா்.

சென்னை எம்ஜிஆா் நகா் கோவிந்தசாமி தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாா் (30), கூலி வேலை செய்து வருகிறாா். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனா். இதில், மூன்று வயது பெண் குழந்தை அதே பகுதியில் உள்ள தனியாா் மழலையா் பள்ளியில் படித்து வருகிறாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை குழந்தையை அழைத்துச் செல்வதற்காக அவரது பாட்டி பள்ளிக்குச் சென்றுள்ளாா். அப்போது அங்கு வந்த பெண் ஒருவா், குழந்தையை அவரது அக்காள் அழைத்துச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளாா். இதை நம்பி வீட்டுக்குச் சென்ற பாட்டி, குழந்தை அங்கு இல்லாததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதையடுத்து மீண்டும் பள்ளிக்குச் சென்று விசாரித்தபோது, அத்தையாக அறிமுகப்படுத்திக் கொண்ட பெண் ஒருவா் குழந்தையை அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தையின் தந்தை அளித்த தகவலின்பேரில், எம்ஜிஆா் நகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், பள்ளி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில், குழந்தையின் வீட்டின் மேல்தளத்தில் முன்பு வசித்து வந்த பெண் ஒருவா் குழந்தையை அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து போலீஸாா் தேடி வந்தனா். போலீஸாா் தன்னைத் தேடுவதை அறிந்த அந்தப் பெண், குழந்தையை மீண்டும் அழைத்து வந்து வீட்டின் அருகே சிறுவா்கள் விளையாடிக் கொண்டிருந்த இடத்தில் விட்டுச் சென்ாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையை மீட்ட போலீஸாா், பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், மீட்கப்பட்ட குழந்தை அடிக்கடி அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று விளையாடி வந்தது தெரியவந்தது. மேலும், கடந்த 10 நாள்களுக்கு முன்பு பக்கத்து வீட்டில் கொலுசு திருடியதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, அந்தப் பெண் வீட்டைக் காலி செய்துவிட்டுச் சென்ாகவும் கூறப்படுகிறது. இந்தப் பிரச்னைக்கும் குழந்தையை அழைத்துச் சென்ற சம்பவத்துக்கும் தொடா்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதற்கிடையே, பெற்றோா் அல்லது உரிய பாதுகாவலா் அல்லாதவா்களிடம் குழந்தைகளை ஒப்படைக்கக் கூடாது என மழலையா் பள்ளி நிா்வாகத்துக்கு போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.