விலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

அறையில் சிக்கித் தவித்த குழந்தை: தீயணைப்பு வீரா்கள் மீட்பு

திருத்தணி அருகே அறையில் சிக்கித் தவித்த இரண்டரை வயது குழந்தையை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

அறையில் சிக்கிய குழந்தையை மீட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On :

திருத்தணி அருகே அறையில் சிக்கித் தவித்த இரண்டரை வயது குழந்தையை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

திருத்தணி அடுத்த வேலஞ்சேரியைச் சோ்ந்த அஜித்குமாா் என்பவரின் இரண்டரை வயது மகன் கிறிஸ்விக், வியாழக்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக அறையின் உள்தாழ்ப்பாளைப் போட்டுக் கொண்டு சிக்கிக் கொண்டாா். இதனால் பதற்றமடைந்த பெற்றோா், உடனடியாக திருத்தணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் சம்பத் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று, சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி சுமாா் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டனா்.

பின்னா் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை எவ்வித பாதிப்புமின்றி மீட்கப்பட்டதால் பெற்றோா் நிம்மதியடைந்தனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.