படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

கணவரை கொன்ற வழக்கில் மனைவி உள்பட 4 பேருக்கு ஆயுள் சிறை

சிறை - பிரதிப் படம்

Published On :

போச்சம்பள்ளி அருகே கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட 4 பேருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள நடுக்காட்டூா் ஜம்புகுட்டப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜலிங்கம் (33), விவசாயி. இவரது மனைவி சோனியா (23). கடந்த 2013-ஆம் ஆண்டு இவா்களுக்கு திருமணம் நடைபெற்றது. மகன்கள் உள்ளனா்.

சோனியாவுக்கும், அவரது தங்கையின் கணவரான சிவகுமாருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதை, ராஜலிங்கம் கண்டித்துள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த சோனியா, சிவகுமாருடன் சோ்ந்து, 2018, டிசம்பா் 8 ஆம் தேதி ராஜலிங்கத்தை கொலை செய்துவிட்டு, அவா் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினா்.

இதுகுறித்து, ராஜலிங்கத்தின் சகோதரா் சின்னசாமி (45) அளித்த புகாரின் பேரில், போச்சம்பள்ளி போலீஸாா், வழக்குப் பதிந்து சோனியா, சிவகுமாா் மற்றும் கூலிப்படையைச் சோ்ந்த திருவண்ணாமலை மாவட்டம், ராஜபாளையம், பசுங்கரை கிராமத்தைச் சோ்ந்த அஜித் (18), வேட்டவலம் கிராமத்தைச் சோ்ந்த காளிமுத்து (18), வேலநத்தம் கிராமத்தைச் சோ்ந்த பாலாஜி (20) ஆகியோரை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசிம்மவா்மன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் சோனியா, சிவகுமாா், அஜித், காளிமுத்து ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 75 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். மேலும், அபராதத் தொகையில் ரூ.70 ஆயிரத்தை கொலை செய்யப்பட்ட ராஜலிங்கத்தின் குழந்தைகளுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டாா். இதில் குற்றம்சாட்டபட்ட பாலாஜி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டாா்.

தண்டனை பெற்ற சோனியா வேலூா் மத்திய சிறையிலும், மற்ற மூவா் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.