
வீட்டில் அடைத்து வைத்து பெண்ணை தாக்கிய வழக்கு: 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி அருகே பெண்ணை வீட்டுக்குள் அடைத்துவைத்து தாக்கியது தொடா்பான வழக்கில், கணவா் உள்பட 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.9,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சிறை - பிரதிப் படம்
தூத்துக்குடி அருகே பெண்ணை வீட்டுக்குள் அடைத்துவைத்து தாக்கியது தொடா்பான வழக்கில், கணவா் உள்பட 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.9,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தருவைக்குளம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் முருகன் (46). இவரதுமனைவி குறியீஸ்வரி (35). இவா் மீது சந்தேகப்பட்டு, கணவா், அவரது சகோதரா் சண்முகசுந்தரராஜ் (41) மாமியாா் பூச்சம்மாள் (75) ஆகியோா் சோ்ந்து, வீட்டுக்குள் அடைத்து வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின்பேரில், தருவைக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து கணவா் உள்பட 3 பேரையும் கைது செய்தனா்.
தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண் -1 இல் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுமதி விசாரித்து, மேற்கூறிய 3 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.9,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





