
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

சிறை - பிரதிப் படம்
கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மாா்த்தாண்டம், கொல்லன்விளை சரல்விளை பகுதியைச் சோ்ந்தவா் ஜெஸ்லின் ராஜகுமாா் (25). இவருக்கு தக்கலை பகுதியைச் சோ்ந்த பிளஸ் 1 படித்து வந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெஸ்லின் ராஜகுமாா் மாணவியைக் கடத்திச் சென்று, கேரளம் மாநிலம், பத்தனம்திட்டா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் ஜெஸ்லின் ராஜகுமாரை கைது செய்து, போக்சோ பிரிவில் வழக்குப் பதிந்து, மாணவியை மீட்டனா்.
இந்த வழக்கு நாகா்கோவிலில் உள்ள மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா, குற்றம் சாட்டப்பட்ட ஜெஸ்லின் ராஜகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பு கூறினாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் நதியா ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





