
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறை - பிரதிப் படம்
நாகையில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, நாகை மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரம், ராமா் மடம் தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் என்கிற ரமேஷ்குமாா் (25). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமியை கடந்த 2022-இல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதுதொடா்பாக சிறுமியின் குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில், நாகை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, ரமேஷ்குமாரை கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை, நாகை மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து ரமேஷ்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து, அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி ஆா். ராஜ்குமாா் உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




