உணவகத்தில் ரசிகைகளை சந்தித்த சீரியல் நடிகை மதுமிதா!

சின்ன திரை நடிகை மதுமிதா உணவகத்தில் ரசிகைகளை சந்தித்து உரையாடிய புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
serial actress Madhumitha with fans
குட்டி ரசிகைகளுடன் மதுமிதா படம் - இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

சின்ன திரை நடிகை மதுமிதா உணவகத்தில் ரசிகைகளை சந்தித்து உரையாடிய புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

உணவகத்தில் உணவு உட்கொண்டு இருந்தபோது தன்னிடம் பேசவந்த பள்ளி மாணவிகளை காக்க வைக்காமல், உடனடியாக அவர்களுடன் பேசி மதுமிதா புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான படங்கள் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளன.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மதுமிதா. இதற்கு முன்பே நம்பர் ஒன் கோடாலு என்ற தெலுங்கு மொழித் தொடரில் நாயகியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த எதிர்நீச்சலில் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது.

எதிர்நீச்சல் தொடரில் நடித்ததற்காக இவருக்கு இதுவரை 5 விருதுகள் கிடைத்துள்ளன. தற்போது விஜய் தொலைக்காட்சியின் அய்யனார் துணை என்ற தொடரில் நிலா என்ற பாத்திரத்தில் மதுமிதா நடித்து வருகிறார்.

இந்தத் தொடரில் தாயை இழந்து தந்தையின் வளர்ப்பில் ஆளான ஆண்கள் மட்டுமே உள்ள வீட்டில் முதல் மருமகளாக நுழைகிறார் மதுமிதா. பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இவர், ஏழைக் கூட்டுக் குடும்பத்தில் சந்திக்கும் சவால்களே அய்யனார் துணை தொடரின் கதைக்களமாகும்.

இத்தொடரிலும் மதுமிதாவின் பாத்திரத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. குடும்பத் தலைவிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையினரையும் மதுமிதா கவர்ந்துள்ளார். இதனால், உணவகத்தில் இருக்கும்போது அவரை சந்தித்த பள்ளி மாணவிகள் அவருடன் பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

நடிகை மதுமிதாவும் பள்ளி மாணவிகளை காக்க வைக்காமல், உணவுக்கு மத்தியில் அவர்களுடன் பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டார். (புகைப்படம் எடுத்துக்கொண்ட மாணவிகளில் ஒருவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மனங்களைக் கவர்ந்தவர்.) அவரின் இத்தகைய பண்புக்கு ரசிகர்கள் பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | சின்னஞ்சிறு கிளியே: எதிர்நீச்சல் தொடர் பாணியில் புதிய தொடர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com