
நடிகர் சூரியின் நடிப்பில் வெளியான மாமன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக வெளியான படம் மாமன்.
இந்தப் படத்தில், சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ஸ்வாசிகா என முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் லட்டுவாக குழந்தை நட்சத்திரம் பிரகீத் சிவன் கலக்கியுள்ளார்.
மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது ஜீ5 ஓடிடி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
மாமன் திரைப்படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி ஜீ5 வெளியாகவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
Actor soori maman movie ott release
இதையும் படிக்க: விரைவில் வெளியாகும் ஏகே 64 அறிவிப்பு..! ரசிகர்கள் மகிழ்ச்சி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.