டிரெண்டாகும் ஸ்குவிட் கேம் - 3..! நீங்கள் பார்த்துவிட்டீர்களா?

கொரியன் இணையத் தொடரான ஸ்குவிட் கேம் - 3 குறித்து...
Squid Game - 3 Poster.
ஸ்குவிட் கேம் - 3 போஸ்டர். படம்: எக்ஸ் / நெட்பிளிக்ஸ் இந்தியா.
Published on
Updated on
1 min read

பிரபல கொரியன் இணையத் தொடரான ஸ்குவிட் கேம் - 3 நேற்றுமுதல் (ஜூன் 27) நெட்பிளிக்ஸில் வெளியானது.

பிரபல கொரியன் இயக்குநர் கவாங் டோங்யுக் இயக்கத்தில் லீ ஜங் ஜே, பார்க் கே சூ, வி கா ஜோன் ஆகியோர் நடித்து கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்குவிட் கேம்மின் முதல் பாகம் வெளியானது.

இந்தத் தொடரில் கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறார்கள். விளையாட ஒப்புக் கொள்கிறவர்களை அடையாளம் தெரியாத இடத்தில் அடைத்து வைத்து ஒரு குழு விளையாட்டை நடத்துகிறது.

அந்த விளையாட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு பெருந்தொகை வழங்கப்படும், மாறாக தோற்றால்? விதவிதமாக கொல்லப்படுகிறார்கள்.

அடுத்தடுத்து திருப்பங்கள் யாரும் ஊகிக்க முடியாத வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதையால், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இந்தத் தொடருக்கு தமிழகம் இன்றி, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ஸ்குவிட் கேம் 2-வது சீசன் உருவானது. அண்மையில், வெளியான இந்த சீசனும் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், ஸ்குவிட் கேம் - 3 நேற்று ( ஜூன் 27) வெளியானது. இதுவே இறுதி சீசன் எனவும் நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் பலரும் இந்தத் தொடர் குறித்து பதிவிட்டு வருகிறார்கள். நடிகைகள் சிலர் இந்தத் தொடரைப் பார்த்துவிட்டீர்களா என இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்துள்ளார்கள்.

Summary

The popular Korean web series Squid Game-3 was released on Netflix yesterday. Its viral on social medias.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com