நடிகை ஜோதிகா வெளியிட்ட புதிய விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் கவனிக்கப்படும் இணையான சூர்யா - ஜோதிகா காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். பல நட்சத்திரங்கள் மேல் கிசுகிசுப்பு, விவாகரத்து வதந்திகள் எழுந்தாலும் இவர்கள் மீது அப்படி எந்த செய்திகளும் வந்ததில்லை.
காரணம், தனிப்பட்ட வாழ்வுவிலும் சூர்யா மிக நேர்த்தியானவர் என ஜோதிகா அடிக்கடி குறிப்பிடுவார். ஜோதிகா குறித்து சூர்யாவும் பெருமிதமாகப் பேசுவார். சினிமாவைக் கடந்து தனிப்பட்ட வாழ்விலும் இந்த இணை பலருக்கும் முன்மாதிரியாக இருக்கின்றனர். குறிப்பாக, சூர்யா ரசிகர்களுக்கு.
ரெட்ரோ வெற்றியைத் தொடர்ந்து சூர்யா, வெங்கட் அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன் சூர்யா தன் மனைவி ஜோதிகாவுடன் கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள சீஷெல்ஸ் நாட்டிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு இருவரும் மகிழ்ச்சியாக பயணம் செய்ததை, ”நீயும் நானும் சொர்க்கத்தில்..” என ஜோதிகா விடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியாக காமெண்ட் செய்து வருவதுடன் வாழ்ந்தால் இவர்களைப்போல் இணை பிரியாமல் வாழ வேண்டும் என தங்கள் விருப்பங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
suriya and jyotika travelled seychelles country
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.