சிவகார்த்திகேயனிடம் மன்னிப்புக் கேட்ட அமீர் கான்! ஏன்?

சிவகார்த்திகேயன் குறித்து அமீர் கான் பேசியுள்ளார்...
actor sivakarthikeyan and aamir khan
நடிகர்கள் அமீர் கான், சிவகார்த்திகேயன்
Published on
Updated on
1 min read

நடிகர் அமீர் கான் சித்தாரே சமீன் பர் படத்திற்காக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

நடிகர் அமீர் கான் நடிப்பில் வெளியான சித்தாரே சமீன் பர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, வசூல் ரீதியாகவும் கலக்கி வருகிறது.

அறிவுசார் சவால்கள் கொண்ட இளைஞர்களுக்கான கூடைப்பந்து பயிற்சியாளராக இருக்கும் அமீர் கான், அவர்களால் எப்படியெல்லாம் சோதிக்கப்படுகிறார் என்கிற கதையில், மூளை வளர்ச்சி குறைபாடு கொண்டவர்களைச் சமூகம் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பதை அழகாக சித்தாரே திரைப்படம் காட்சிப்படுத்தியிருக்கிறது.

இப்படம் ஸ்பானிய மொழியில் வெளியான சாம்பியன் என்கிற படத்தின் ரீமேக் ஆகும்.

இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய நடிகர் அமீர் கான், “சித்தாரே சமீன் பர் திரைப்படத்தின் கதையை இயக்குநர் ஆர். எஸ். பிரசன்னா சொன்னபோது நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், லால் சிங் சத்தா தோல்வியால் மிகுந்த மனவேதனையில் இருந்ததால் சித்தாரே படத்திலிருந்து விலகினேன். பின், தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இப்படத்தை எடுக்கத் திட்டமிட்டோம். அதுகுறித்து அவரிடமும் பேசினோம்.

ஆனால், நானும் பிரசன்னாவும் படத்தின் எழுத்துப் பணிகளை மேற்கொண்டபோது இப்படத்தில் நானே நடிக்கிறேன் என்கிற விருப்பத்தைத் தெரிவித்தேன். பிரசன்னாவும் ஒகே என்றார். பின், சித்தாரேவில் நாயகனாக நடித்தேன். இதற்காக, நடிகர் சிவகார்த்திகேயனை அழைத்து நான் மன்னிப்புக் கேட்டேன். அது அவருக்கு ஏமாற்றமாக இருந்தாலும் என் சூழ்நிலையைப் புரிந்துகொண்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

aamir khan apologies to sivakarthikeyan for sitaare zameen par movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com